முன்னாள் பிரதமர் மனமோகன்சிங் பிறந்த நாள் : காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
திருச்சி செப்.26 முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் படத்திற்கு காங்கிரசார் மரியாதை மாவட்டத் தலைவர் எல்.ரெக்ஸ் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு
இந்தியப் பொருளாதார நிபுணர், கல்வியாளர். 2004 முதல் 2014 வரை இந்தியாவின் 13வது பிரதமராகப் பணியாற்றி, இந்தியப் பொருளாதார சீர்திருத்தங்களில் முக்கியப் பங்காற்றினார் தனது கடின உழைப்பு மற்றும் எளிமையான நடத்தையால் நினைவுகூரப்படுகிறார். டாக்டர் மன்மோகன் சிங் அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மாநகர் மாவட்ட தலைவர் மாமன்ற உறுப்பினர் எல். ரெக்ஸ் தலைமையில் அகில இந்திய பொதுசெயலாளர் கிறிஸ்டோபர் திலக் ஆகியோர் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்வில் மாவட்ட பொருளாளர் முரளி, மலைக்கோட்டை கோட்ட தலைவர் வெங்கடேஷ் காந்தி,காட்டூர் கோட்ட தலைவர் ராஜா டேனியல் ராய், அரியமங்கலம் கோட்ட தலைவர் அழகர், ஜங்ஷன் கோட்ட தலைவர் பிரியங்கா பட்டேல், அணி தலைவர்கள் கலைப்பிரிவு அருள், அமைப்பு சாரா பிரிவு மகேந்திரன், ஆர்டிஐ பிரிவு கிளமென்ட், மகிளா காங்கிரஸ் அஞ்சு, தெற்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் கவிதா நாச்சியார், மீனவர் அணி மாநில பொதுசெயலாளர் தனபால், வார்டு நிர்வாகிகள் பாண்டியன், மகேஷ், பெரியசாமி, அன்பழகன், முரளிதரன், கிருபாவாதி, சத்தியா, அலமேலு, கீர்த்தனா, நிஷா, பொன்அரசி, சுல்தான் பாஷா, மும்தாஜ்,வளன் ரோஸ், எழில் மற்றும் பல நிர்வாகிகள் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.