பூங்கா காவலாளி உள்பட இருவர் சாவு
திருச்சி ஆக 15 திருச்சி தென்னூர் வாமடம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 51) திருச்சி கேகே நகர் மாநகராட்சி பூங்காவில் காவலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த பத்தாம் தேதி மது அருந்திவிட்டு வந்தபோது தன் வீட்டின் அருகே தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது இதையடுத்து விஜயகுமாரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த நிலையில் நேற்று விஜயகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தில்லை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடையாளம் தெரியாத முதியவர் சாவு : திருச்சி அரசு மருத்துவமனை குடியிருப்பு மருத்துவ அலுவலர் நந்தகுமார் நேற்று நரம்பியல் மருத்துவர் வளாகம் அருகே சென்றபோது அங்கு 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மயங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.இதனை பார்த்து பொதுமக்கள் அரசு மருத்துவமனை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றிஇறந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்
இருசக்கர வாகனத்தில் தவறி விழுந்து ஒருவர் சாவு: திருச்சி தெற்கு காட்டூர் கமலா நேரு நகரை சேர்ந்தவர் காஜா மொய்தீன் (வயது 52) இவர் கடந்த 13 ந்தேதி திருச்சி தஞ்சை நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார் அப்பொழுது எஸ்ஐடி பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது இருசக்கர வாகன கட்டுப்பட்டிருந்த அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த காஜா மொய்தீன் நேற்று உயிரிழந்தார் இது குறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.