பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி: மாவட்ட ஆட்சியர் வழங்கல்

0 246
Stalin trichy visit

தமிழக அரசு சார்பில் அரசு பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டியை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வழங்கினார்!

திருச்சி, ஆக.5 திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள கண்ணனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 76 மாணவ மாணவிகள் மற்றும் அரசு ஆதிதிராவிட மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கும் விலையில்லா மிதிவண்டியை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார வழங்கினார் முன்னதாக சேனப்பநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 69 மாணவ மாணவிகளுக்கு துறையூர் சட்டமன்ற உறுப்பினர் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தர்மன் ராஜேந்திரன் ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, வீரபத்திரன்,
மாவட்ட கல்வி முதன்மை அலுவலர் சிவகுமார்
மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியைகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.