ஐக்கிய மக்கள் நல சங்கம் மற்றும் திருச்சி வாசன் கண் மருத்துவமனை இணைந்து திருவெறும்பூர் பகுதியில் உள்ள கும்பக்குடி சமுதாயக் கூடத்தில் இன்று இலவச கண் பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாமினை நடத்தினர்.
இதில் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, கண்ணில் நீர் வடிதல், கண் அழுத்த நோய், கண் அரிப்பு சர்க்கரை நோயால் விழித்திரை பாதிப்பு மற்றும் கண் சம்பந்தமான நோய்களுக்கு இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

மேலும் இந்த நிகழ்வில் கும்பக்குடி ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யா ஹரிகரன், மேற்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட கவுன்சிலர் சவரியம்மாள் செல்வராஜ், பொது செயலாளர் ரவிச்சந்திரன், மண்டல தலைவர் இருதயராஜ், மகளிர் அணி தலைவி தேவி மற்றும் வாசன் கண் மருத்துவமனை குழுவினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய.. https://chat.whatsapp.com/GIK8EHtoSzZArrJx8DcPlA