முசிறி கைலாசநாதர் ஆலயத்தில் கணபதி ஹோமம்
திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் திருத்தலையூர் கிராமத்தில் அமைந்துள்ள உடையவர் கைலாசநாதர் ஆலயத்தில் கணபதி ஹோமம் மற்றும் கோபூஜை நடைபெற்றது.
காவேரி – அய்யாறு இணைக்க வேண்டிய உடையவர் கைலாசநாதர் குடமுழுக்கு திருப்பணி சிறப்பாக நடைபெற வேண்டியும் அய்யாற்று படுகையில் வாழும் மக்கள் சுபிட்சமாகவும் நலமாகவும் ஆரோக்கியமாகவும் வாழ வேண்டியும் கணபதி பூஜையும் கோ பூஜையும் நடைபெற்றது நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அய்யாறு பாதுகாப்பு மற்றும் ஏரிகள் புனரமைப்பு சங்கம் திருத்தலையூர் கிராம மக்கள் ஏற்பாடு செய்தனர்.
நிகழ்ச்சியில் காலையில் மூன்று சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஒலிக்க நான்கு மணி முதல் 6 மணி வரை கணபதி ஹோமமும் ஆறு மணி முதல் 9 மணி வரை 55 கன்று ஈன்ற பசுக்களுக்கு கோபூஜை சிறப்பாக நடைபெற்றது. கிராம முக்கியஸ்தர்கள் இளைஞர்கள் என பலதரப்பட்ட மக்களும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அய்யாறு யோகநாதன் சிறுச்சோழன் திருத்தலையூர் சிவத்தொண்டர் தமிழ்ச்செல்வன் யோகராஜ் இந்து முன்னணி அமைப்பின் பாண்டியன் என்னண 250க்கு மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். பசுக்களுக்கு அகத்திக்கீரை வாழைக்காய் கத்திரிக்காய் வாழைப்பழம் கொடுத்து சந்தனம் குங்குமம் மலைகள் அணிவித்து புடவை சாத்தி அனைத்து பசுக்களுக்கும் பூஜை சிறப்பாக மூன்று சிவாச்சாரியார் செய்தனர்