இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

0 236
Stalin trichy visit

திருச்சி, ஜன.20 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறையில் திருமணமாகி 4 ஆண்டுகளேயான இளம் பெண் மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறை எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி  கௌதமி (24). இவர்களுக்கு திருமணம் ஆகி நான்கு ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சரவணன் புலிவலம் பகுதியில் உள்ள பேக்கரியில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இளம்பெண் கௌதமிக்கு கடந்த 6 மாதத்திற்க்கு முன்பு மஞ்சகாமாலை நோய் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.அதிலிருந்து சற்று மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் கடந்த 15 நாட்களுக்கு முன்பு கௌதமியின் அப்பா இறந்துவிட்டதால் மேலும் மனஉளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவலறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.