திருச்சி விமான நிலையத்தில் ரூ.37 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்திலிருந்து துபாய், சிங்கப்பூர், மஸ்கட், ஓமன் உள்ளிட்ட நாடுகளுக்கு சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் தங்கம் கடத்தி வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது.
அந்த வகையில் ஷார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை மத்திய நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்துகொண்டிருந்தனர்.
அப்போது புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை சேர்ந்த சரவணன்(வயது 26) என்ற பயணி தனது உடலில் மறைத்து எடுத்து வந்த 750 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.37 லட்சம் என தெரிய வருகிறது.