அரசுப் பள்ளி சீருடை தயாரிப்பு தொழிலாளாகள் போராட்டம்

0 272
Stalin trichy visit

திருச்சி, ஏப். 30  அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சீருடைகள் தயாரித்து வழங்கும் பணியில் திருச்சி மாவட்ட 3 கூட்டுறவுச் சங்கங்களில் உள்ள 2, 500-க்கும் மேற்பட்ட பெண் தையல் தொழிலாளாகள் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையில் இந்தாண்டு சீருடை தயாரிக்கும் பணியை தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதைக் கண்டித்து 100-க்கும் மேற்பட்ட பெண் தையல் தொழிலாளாகள் மாவட்ட ஆட்சியரகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.

இதையடுத்து சமூக நலத்துறை அலுவலர்கள், கூட்டுறவு அலுவலர்கள் பேச்சுவாத்தை நடத்தினர். தங்களது கோரிக்கைகள் மீது அரசின் கவனத்தை ஈக்கவே போராட்டம் நடத்துவதாக கூறியும் தேதல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் ஜூன் 4 வரை அனுமதி வழங்க முடியாது என காவல்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இருப்பினும், தங்களுக்கு சீருடைகள் வழங்காமல், தனியாருக்கு வழங்கினால் வீதிக்கு வந்து போராடுவோம் என அவாகள் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.