தூய்மைப் பணியாளர்களுக்கு அரசு நலத்திட்ட முகாம் : மேயர் தொடங்கி வைத்தார்

0 33
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 24  திருச்சி மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு அரசு நலத்திட்ட முகாமினை மேயர் மு.அன்பழகன் தொடங்கி வைத்தார்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் உள்ள 2,3,4 மற்றும் 5 ஆகிய மண்டல உட்பட்ட பகுதிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கான சிறப்பு அரசு சேவைகள் மற்றும் நலத்திட்ட முகாம் உய்யக்கொண்டான் திருமலை பகுதியிலுள்ள தனியார் திருமண மண்டபம் மற்றும் மாநகராட்சி மண்டலம் 2 அலுவலகத்திலும் நடைபெற்றது. இம்முகாமினை மாநகராட்சி மேயர்மு. அன்பழகன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

இம்முகாமில் நகர் நல அலுவலர் கார்த்திகேயன் , மண்டல தலைவர் துர்கா தேவி, உதவி ஆணையர் வீர முத்துக்குமார், முத்து முருகேசன் பாண்டி , மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், சுகாதார அலுவலர்கள், ஆய்வாளர்கள் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டார்கள் .

கழிவுநீர்த் தொட்டி பணியாளர்கள் மற்றும் கழிவு சேகரிப்புத் தொழி லாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பு உரிமைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. தகுதியான தூய்மைப் பணியாளர்களுக்கு உடனுக்குடன் நலவாரிய அட்டைகள் வழங்க மேயர் மு.அன்பழகன் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.

வட்ட வழங்கல் துறை, தாட்கோ, தொழிலாளர் நலத்துறை, மருத்துவத்துறை, கல்வித்துறை மற்றும் சமூக நலத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் அரங்குகள் அமைக்கப்பட்டு மனுக்கள் பெறப்பட்டன. இந்தச் சிறப்பு முகாமில்300-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர் களும் அவர்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.