அரசுப் பேருந்துகளில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தும் திட்டம் விரிவுபடுத்தப்படும் : அமைச்சர் சிவசங்கர்

0 267
Stalin trichy visit

திருச்சி, டிச.29  அகில இந்திய 13வது பகுத்தறிவாளர் கழக மாநாடு, திருச்சியில் 28, 29 ஆகிய இரண்டு நாட்கள்  தி. க. தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற  இந்த மாநாட்டில் நாட்டில் பல்வேறு பகுதிகள் இருந்து பகுத்தறிவாளர்கள் கலந்து கொண்டு உள்ளனர்

இன்று நடைபெற்ற நிகழ்வில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாடு பகுத்தறிவாளர் சங்கம் மற்றும் இந்திய பகுத்தறிவாளர் கூட்டமைப்பு இணைந்து நடத்திய மாநாட்டிற்கு
இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து பகுத்தறிவாளர்கள் கலந்து கொண்டனர்…

சமீபத்தில் கேரள வைக்கம் நூற்றாண்டு விழா கேரளத்தில் நடைபெற்றது. இதில் கேரள முதல்வர் மற்றும் தமிழக முதல்வர் பங்கேற்றனர். வைக்கம் வெற்றி விழா நினைவாக வைக்கத்திலிருந்து சென்னைக்கு நேரடி பேருந்து இயக்க வேண்டும் என வீரமணி கேட்டுக்
கொண்டார்.

அதன் அடிப்படையில் சென்னையிலிருந்து வைக்கத்திற்கு இரண்டு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. சென்னையில் மாலை 4 மணிக்கு இயக்கப்படும் பேருந்து அடுத்தநாள் காலை 8.30 மணிக்கு வைக்கம் சென்றடையும் அதே போல வேகத்தில் இருந்து மாலை 3.30 மணிக்கு புறப்படும் பேருந்து காலை 8 மணிக்கு வந்தடையும் வைக்கம் வரலாற்றை அறிந்து கொள்ள
இந்த பேருந்து உதவிகரமாக இருக்கும்.

ராமதாஸ் அன்புமணி குறித்த கேள்விக்கு இது பகுத்தறிவாளர் மாநாடு பகுத்தறிவு கொண்டவர்கள் குறித்து பேசினால் மட்டும் நன்றாக இருக்கும் என கிண்டலாக கூறினார். கடந்த பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக
புகார்கள் எழுந்தது. தனியார் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் இயக்கி இதற்கு தீர்வு காணப்பட்டது.

தமிழக அரசு பேருந்துகளில் GPS பொருத்தும் பணி முதற்கட்டமாக சென்னையில் நடைமுறைக்கு வந்துள்ளது. தமிழகம் முழுவதும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.