ரூ.9 லட்சம் கோடி கடனில் செய்த நல்ல திட்டங்கள் என்ன? சீமான் கேள்வி

0 297
Stalin trichy visit

திருச்சி, டிச.29  நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழகம் முழுவதும் கட்சியின் கட்டமைப்பு தொடர்பாக நிர்வாகிகளை சந்தித்து கலந்தாய்வு நடத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி மாவட்டம் லால்குடி மற்றும் மணச்சநல்லூர் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிக்கான நிர்வாகிகளுடன் கலந்தாய்வு நிகழ்ச்சி திருச்சி –  தஞ்சை சாலை உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. பின்னர் சீமான் திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

பா.ம.க. கட்சியின் பிரச்சனை குறித்து கருத்து கூற முடியாது. பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டும். டாக்டர் ராமதாஸ் அரசியலுக்கு வரும்போது பொதுவாக தான் வந்தார். கடைசியாக வழி இல்லாம தான் அன்புமணியை கொண்டு வந்தார்.

நாம் தமிழர் கட்சியில் தலைவர் உருவாகட்டும் , அதன் பின்பு பார்த்துக் கொள்ளலாம். நாங்கள் பார்க்கும் தலைவன் வேறு. படம் எடுத்தால் தலைவர் என்று பெயர் போட்டுக் ஆனால் தலைவருக்கு பல தகுதி உள்ளது. தன்னை எரித்துக் கொண்டு ஒளி தரும் தலைவனாக இருக்க வேண்டும்.140 க்கு மேற்பட்ட வழக்குகள் என் மேல் உள்ளது. என் கால் படாத நீதிமன்றங்கள் இல்லை. கட்சி அரசியலும், தேர்தல் அரசியல் தான உள்ளது. மக்கள் அரசியல் கிடையாது.

இன்றைக்கு இருக்கின்ற திராவிடர் கழகத் தலைவர், அன்றைக்கும் பெரியாரோடு இருந்தார். அப்படி இருந்தும் நம்பகமான ஆள் வேண்டுமென்று பெரியார் மணியம்மையை திருமணம் செய்தார். அப்படியென்றால் பெரியாருக்கு வேறு ஒரு நம்பிக்கை தேவைப்பட்டது.

இந்திய திராவிடர்களுக்கு இங்கு வலிமை இல்லை. கிருஷ்ண சாமி, ஜான் பாண்டியன் வேறு வேறு தொகுதியில் நின்று இருந்தால் வெற்றி பெற்று இருக்கலாம். திராவிடர்கள் பிரித்து ஆள்கின்றனர்.

கோவில்,மதம் இதை தவிர பாஜக 15 ஆண்டுகளில் செய்தது என்ன.?  எல்லா கட்சி அமைச்சர்களும் பள்ளி கல்லூரி மருத்துவமனை வகுத்துள்ளனர். பிறகு எப்படி அங்கு தரம் இருக்கும்.  ரூ. 9 லட்சம் கோடி கடனில் செய்த நல்ல திட்டங்கள் என்ன இருக்கிறது.

பள்ளியில் 7 நாட்களில் 5நாட்கள் உப்புமா போடுகின்றனர். 60 வருட ஆட்சி மக்கள் ஒரு வேளை சாப்பாடு கூட இல்லாமல் உள்ளனரா?. உப்புமா கம்பெனி நடத்தி கொண்டு உள்ளனர்.

எந்த திட்டத்திற்கு கோரிக்கைகளுக்கு காசு இல்லை ஆனால்  ஆயிரம் ரூபாய்  கொடுக்க காசு எப்படி இருக்கிறது. யார் கேட்டது ஆயிரம் ரூபாய்.

அண்ணாமலை கோபத்தை குறைத்து மதிப்பிட கூடாது. அடித்துக் கொண்டது வருத்தம் அளிக்கிறது.அண்ணாமலை சவுக்கால் அடித்துக்கொள்ள கூடாது. சமந்தப்பட்டவர்களை தான் அடிக்க வேண்டும். வாக்குக்கு காசு கொடுத்தால் 10 ஆண்டு தேர்தலில் நிற்க தடை என்று கூறினால். காசு கொடுக்க மாட்டார்கள், பயம் வரும்.

ஈரோடு தேர்தல் நடக்க போகிறது வந்து பாருங்கள். காசு பணம், சாப்பாடு மந்தை யில் அடைப்பு எல்லாம் நடக்கும். இலவசங்கள் வளர்ச்சி திட்டங்கள் இல்லை, வீழ்ச்சி திட்டங்கள். இலங்கை, பங்களாதேஷ் நாட்டில் நடந்தது போல இங்கும் நடக்கும்.

முதலமைச்சர் படத்தின் மீது  மூதாட்டி செருப்பை வீசினார்.. அவர் ஆதங்கத்தை கேட்காமல் தனிப்படை அமைப்பது நியாயமா? எனக்கும் திருச்சி எஸ்.பி -கும் எந்த பிரச்சனை இல்லை.. சாதாரணமாக கடந்து போகும்.

டங்ஸ்டன் , விவகாரத்தில் அண்ணாமலை நிலைப்பாடு என்ன? கொடநாடு, ராம்குமார் ஜெயில் சம்பவம், உள்ளிட்ட பல சம்பவங்கள் நடந்த இடத்தில் எங்கும் CCTV வேலை செய்யவில்லை. அதுவும் அவங்க ஆள் போல. பல்கலை கழக மாணவி விவகாரத்தில் குற்றவாளி கை,கால் உடைக்கவில்லை கண்துடைப்பு மட்டுமே  எனக் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.