திருச்சி, அக்.5 திருச்சி மாவட்டம் குணசீலம் அருள்மிகு ஸ்ரீ பிரசன்னா வெங்கடாசலபதி பெருமாள் திருக்கோயில் பிரமோற்சவம் திருவிழாவினையொட்டி இன்று நடைபெற்ற திருத்தேரோட்டத்தினை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் வடம்பிடித்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் முசிறி சட்டமன்ற உறுப்பினர் தியாகராஜன், ஒன்றியக்குழுத் தலைவர் மாலா இராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
