கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது

0 242
Stalin trichy visit

திருச்சி, மே 4  திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருங்களூர் ஊராட்சியில் உள்ள புரத்தாக்குடியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருங்களூர் ஊராட்சியில் உள்ள புரத்தாக்குடியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக சமயபுரம் காவல் ஆய்வாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த சமயபுரம் காவல் ஆய்வாளர் சம்பவ இடத்திற்கு சென்று சோனையில் ஈடுபட்டார். அப்போது வாலிபர் ஒருவர் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தது போலீசாரின் சோதனையில் தெரியவந்தது. அவரை பிடித்து விசாரணை செய்ததில் லால்குடி அருகே நெற்குப்பை மலை மாதா கோவில் தெருவைச் சேர்ந்த  வேளாங்கண்ணி (32) என்கின்ற முருகானந்தம் என தெரியவந்தது.

பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்த சமயபுரம் போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.