அடாத மழையிலும்! அசராத மாமன்ற உறுப்பினர் ந.செந்தில்
“மக்கள் போற்றும் மகேஸர்”மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதல் படி 43-ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் இன்று தனது வார்டுக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் அடாத மழையிலும் கொஞ்சம் கூட அசராமல் தெற்கு காட்டூர் சீதக்காதி தெரு, மலையப்ப நகர் ஆகிய இடங்களில் மழை
யினால் சாக்கடை அடைத்து வெள்ளம் போல் ஓடியதை உடனடியாக சரி செய்தார்,
அதேபோல் பர்மா காலனி ,காவேரி நகர் மூன்றாவது தெரு, அம்பேத்கர் தெரு, அருகில்,பிலோமினாள் புரம் நான்காவது தெரு, ஆகிய பகுதிகளில் மழையிலும் நின்று கொண்டு அனைத்து இடங்களையும் கழிவு நீர், மழைநீரை அகற்றி மாபெரும் மக்கள் போற்றும் மாமன்ற உறுப்பினராக அனைவரும் போற்றும் கவுன்சிலராக தனது பணியை சிறிதும் ஓய்வில்லாமல் வெயிலிலும் மழையிலும் கடுமையாக உழைத்து வருகிறார்,எனவே இவரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.