மின்சர திருத்த சட்டத்தை  ஒன்றிய அரசை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கம் ஆர்ப்பாட்டம்

0 257
Stalin trichy visit

 

மணப்பாறை கோவில்பட்டி சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவகம் முன்பு தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில்   நெல் குவிண்டாலுக்கு   ,2500ரூபாயும் கரும்பு டன்னுக்கு ,4,000ரூபாயும் தமிழக அரசை வழங்கவும் . விவசாய விரோத நடவடிக்கைகளை கை விடவும்,

மின்சார சட்ட திருத்த சட்டத்தை திரும்ப பெற ஒன்றிய  அரசை வலியுறுத்தியும் கை பேசிமூலம் ஒளியை பாய்ச்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

தமிழ்நாடு விவசாய சங்கம் ஒன்றிய தலைவர் தங்கராசு தலைமை வகித்தார் . மாவட்ட பொருளாளர் பழனிசாமி கண்டன உரை நிகழ்தினர் சி.பி.ஐ நகர செயலாளர் ஜனசக்தி உசேன், மாவட்ட குழு உறுப்பினர்கள் சௌக்கத்அலி, நல்லுச்சாமி ,நகரகுழு ஆரிப் ,முருகன், விஜயா , பிச்சைகண்ணு, பொண்ணுச்சாமி உட்பட தோழர்கள் கலந்துகொண்டு கண்டன முழக்கம் மிட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.