கொரோனா தொற்று கணிசமாக அதிகரித்து வரும் வேளையில் தற்போது குழந்தைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்ள மருத்துவ வல்லுநர்கள் அறிவுரை கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு இளங்கனல் தொண்டு நிறுவனத்தின் சார்பில் குழந்தைகளுக்கான ஆரோக்கிய உணவு திட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.இத்திட்டத்தின் துவக்க விழா இன்று திருச்சி ஏர்போர்ட் அருகில் உள்ள அன்னை ஆசிரம வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வினை திருச்சி மாவட்ட சமூக நல அலுவலர் அ. தமீமுனிஷா தலைமை ஏற்று இத்திட்டத்தினை துவக்கி வைத்தார்கள். சைல்டு லைன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஷரப் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

முதற்கட்டமாக குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து நிறைந்த பொருட்கள் அடங்கிய ஆரோக்கிய உணவு பெட்டி 40 குழந்தைகளுக்கு வழங்கி துவக்கிவைத்தனர். மாவட்ட சமூக அலுவலர்…குழந்தைகளின் பாதுகாப்பு அவசியம் பற்றியும் 3 வது அலையின் தாக்கத்திலிருந்து குழந்தைகள் எவ்வாறு பாதுகாத்து கொள்ள வேண்டுமென்றும் உடல் உள்ள நலன் குறித்த விழிப்புணர்வு செய்தி வழங்கினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் இளங்கனல் நிர்வாகிகள், K. ரஞ்சித் குமார், D.ஜோசப் அமல்ராஜ், J. அற்புத சகாயராஜ், A. அந்தோணி ஜெய்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய…https://chat.whatsapp.com/GHoBSZRd0IRL3LL0595Pg8