மணப்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை

0 274
Stalin trichy visit

திருச்சி, மே 20  திருச்சி மாவட்டம், மணப்பாறை மற்றும் சுற்றுவட்டடாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில் கடந்த சில தினங்களாக அவ்வபோது மழை பெய்து வரும் நிலையில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று மதியத்திற்கு பின் மேகங்கள் புடைசூழ இருண்டு காணப்பட்டதுடன் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. சிறிது நேரத்தில் கனமழையாக வெளுத்து வாங்கத் தொடங்கியது. காற்றுடன் சில மணி நேரம் நீடித்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக் கெடுத்து ஓடியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் மணப்பாறை பஸ் நிலையம் முன்பு கழிவு நீருடன் மழைநீர் குளம் போல் தேங்கி இருந்ததால் கடும் துர்நாற்றம் வீசியதுடன் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தோடு தண்ணீரை கடந்து சென்றனர். பலரும் பஸ் நிலையத்தின் உள்ளே சென்று தண்ணீரை கடந்து செல்லும் நிலையும் ஏற்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.