வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகையை திருட்டு

0 399
Stalin trichy visit

திருச்சி ஏப் 28  திருச்சி திருவானைக்காவல் அகிலா நகரை சேர்ந்தவர் ராஜேந்திர பிரசாத் இவர் சிவகங்கை மாவட்டத்தில் கூட்டுறவு துறையில் இணை பதிவாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 24ந்தேதி மதியம் தனது வீட்டை பூட்டிவிட்டு. குடும்பத்துடன் கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு சென்று விட்டார்.

இந்நிலையில் நேற்று வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்ட இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.பிறகு உள்ளே சென்று பார்த்தபோது வ வீட்டின் பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் 10 பவுன் நகையை திருடி சென்றிருப்பது தெரியவந்தது.இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜேந்திர பிரசாத் உடனடியாக திருவரங்கம் குற்றப்பிரிவுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து போலீசார் மற்றும் மோப்ப நாய்,
கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனையில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து திருவரங்கம் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து கூட்டுறவு இணைப்பதிவாளர் வீட்டில் நகையை திருடிய மர்ம ஆசாமிகளை வலைவிசி தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.