இரண்டு குழந்தைகளின் தாய் தூக்கிட்டு தற்கொலை

0 268
Stalin trichy visit

திருச்சி, ஏப். 28 திருச்சி இபி ரோடு வேதாந்திரி கோவில் தெருவை சேர்ந்தவர் விஜய். இவரது மனைவி சந்தியா (வயது 23)இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன.கடந்த ஆறு மாதங்களுக்கு முன்புதான் சந்தியா இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் சந்தியா தாய் வீட்டில் இருந்து வந்தார்.இந்த நிலையில் கணவன் மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது.இதை அடுத்து வீட்டில் தனியாக இருந்த சந்தியா மன உளைச்சலில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சந்தியா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கோட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.