வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

0 312
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 4  திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள துவரங்குறிச்சி, சின்ன செட்டிகுளத்தெருவில் வசித்து வருபவர் சைபு நிஷா (வயது 52). இவர் நேற்று ஒடுகம்பட்டியில் உள்ள தர்காவிற்கு சென்று விட்டு மீண்டும் இன்று வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் வைக்கப்பட்டிருந்த இரண்டு பவுன் நகை மற்றும் ரூ.20,000 ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரிய வந்தது. உடனடியாக துவரங்குறிச்சி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.

தகவலின் பெயரில் துவரங்குறிச்சி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

Leave A Reply

Your email address will not be published.