முசிறி கைகாட்டியில் நகர காங்கிரஸ் சார்பில் சாலை மறியல்

0 297
Stalin trichy visit

முசிறி கைகாட்டியில் வட்டார நகர காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் முசிறி கை காட்டியில் வட்டார நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் ராகுல் காந்தி எம்பி பதவி பறிப்பு, மற்றும் கைது சம்பவம் ஆகியவற்றை கண்டித்து ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்டாரத் தலைவர் நல்லேந்திரன் தலைமை வகித்தார். இளைஞர் அணி மாவட்ட துணை தலைவர் ஜெயபிரகாஷ், மாவட்ட பொதுச் செயலாளர் ராஜா செல்வம் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜகோபால் வட்டார துணைத் தலைவர்கள் சத்தியமூர்த்தி, மாரிமுத்து ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். பின்னர் அனைவரும் முசிறி கைகாட்டியில் திருச்சி நாமக்கல் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிகழ்வில் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.