காலாவதியான சுங்கச்சாவடியை அகற்ற கோரி மனிதநேய மக்கள் கட்சியினர் முற்றுகை போராட்டம்

0 157
Stalin trichy visit

திருச்சி, செப்.17 மத்திய அரசு தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் வசூழிப்பதற்கு எதிராக மனித நேய மக்கள் கட்சி சார்பில் திருச்சியில் தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திருவெறும்பூர் அருகே துவாக்குடியில் உள்ள சுங்கச்சாவடியை மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளரும் மணப்பாறை எம்எல்ஏ வுமான அப்துல் சமது தலைமையில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்புஏற்பட்டது

நாடு முழுவதும் மத்திய அரசு தேசிய நெடுஞ்சாலை துறை அமைச்சகத்தின் கீழ் நெடுஞ்சாலைகளா பராமரிப்பதற்காக சிங்க கட்டணங்களை வசூலித்து வருகிறது.

இதில் வருடத்திற்கு இரண்டு முறை சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பெரிதும் பாதிக்கப்படுவதுடன் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்கிறது.

இதனால் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் மேலும் காலாவதியான சுங்கச்சாவடிகளை உடனடியாக இழுத்து மூட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு அமைப்புகளும் அரசியல் பிரதிநிதிகளும் கோரிக்கையாக வைத்து வருவதுடன் அடிக்கடி போராட்டங்களையும் அறிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மனித நேய மக்கள் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் திருச்சி, செங்கல்பட்டு உள்ளிட்ட 7 இடங்களில் சுங்கச்சாவடிகளை முற்றுகைவீட்டு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அதில் ஒரு பகுதியாக திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திருவெறும்பூர் அருகே துவாக்குடி பகுதியில் உள்ள சுங்கச்சாவடியை மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளரும் மணப்பாறை எம்எல்ஏ னமான அப்துல் சமது தலைமையில் மனிதநேய மக்கள் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது என்று செங்கல்பட்டு பரனூர் சங்கசாவடி காலாவதியாகி 10 ஆண்டுகளுக்கு மேலாகி ஒன்றிய அரசின் அமைச்சர்களின் உறவினர்களுக்கு சுங்க கட்டணம் வசூல் செய்ய அனுமதி அளித்துள்ளார்கள். அவற்றை ரத்து செய்ய வேண்டும் என்றார்.

இதனால் திருச்சி -தஞ்சை தேசிய நெடுஞ்சாலை ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.