திருவானைக்காவல் புதிய கொடி மரம் பிரதிஷ்டை

0 185
Stalin trichy visit

திருச்சி, செப். 16  திருச்சி திருவானைக்காவல் புதிய கொடி மரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது

பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோவில் பிரதான கொடிமரம் மற்றும் எட்டுத்திக்கு கொடிமரம், பழுதடைந்த நிலையில் பாலாலயம் செய்யப்பட்டு அகற்றப்பட்டது.

தற்போது இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் மூலம் புதிய கொடிமரங்கள் உபயமாக பெறப்பட்டு, திருக்கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது.

தொடர்ந்து ஆலயத்தில் ஹோமம் வளர்க்கப்பட்டு, கணபதி பூஜை, வாஸ்து பரிகார பூஜைகள் செய்யப்பட்டு பின்னர் ஜம்புகேஸ்வரர் சன்னதி பிரதான கொடிமரம் மற்றும் எட்டுத்திக்கும் திசைகளிலும் கொடிமரமானது, திருக்கோவில் அர்ச்சகர்கள் வேதமந்திரங்கள்முழங்க கொடி மரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு நிலைநிறுத்தப்பட்டு, தீபாராதனை கட்டப்பட்டது. இந்நிகழ்வில் திருக்கோவில் உதவியாளர் ரவிச்சந்திரன் மற்றும் பக்தர்கள் திரளானோர் கலந்துகொண்டிருந்தனர்.

தொடர்ந்து, ஐப்பசிமாதம் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட கொடிமரங்களுக்கு தங்ககவசங்கள் பூட்டப்பட்டு கார்த்திகை அல்லது தை மாதத்தில் கொடி மரங்களுக்கான சம்ப்ரோக்ஷணம் நடைபெற உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.