துறையூர் அருகே கணவன், மனைவி வெட்டி படுகொலை

0 449
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகே சோபனாபுரத்தில், பி.மேட்டூரை சேர்ந்த ராஜ்குமார் (28), அவரது மனைவி சாரதா (22) ஆகியோர் வெட்டிக் கொலை.

சோபனாபுரத்தை சேர்ந்த விஜயசேகரன் என்பவருக்கு சொந்தமான, நாலு ஏக்கர் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர்கள் விவசாயம் செய்து வந்தனர்.

இந்நிலையில், இருவரும் தோட்டத்திற்கு அருகே உள்ள தொகுப்பு வீட்டின் வெளியே, இரும்பு கட்டிலில் தலையில் வெட்டு காயங்களுடன் இறந்து கிடக்கிறார்கள். நகைகள் எதுவும் திருட்டுப் போகவில்லை.
முசிறி காவல்துறை துணை கண்காணிப்பாளர் யாஸ்மின் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டார் மேலும் திருச்சியில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்
இதுகுறித்து உப்பிலியபுரம் போலீசார் வழக்குப் பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

துறையூர் அருகே கணவன், மனைவி இருவரும் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.