மனைவியை கல்லால் அடித்து கொலை செய்த கணவர் குண்டர் சட்டத்தில் கைது

0 263
Stalin trichy visit

காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, மனைவியை கல்லால் அடித்து கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய கணவர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது.

 

பொன்மலை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட இரயில்வேதுறைக்கு சொந்தமான, தற்சமயம் யாரும் குடியில்லாத வீட்டின் சமையல் அறையில்  கடந்த 03.07.2023-ந்தேதி பெண் ஒருவர் புடவையால் தூக்கிட்டு தொங்கியபடி இறந்த நிலையில் உள்ளதாக கிடைத்த தகவலின்பேரில், வழக்கு பதிவு செய்யப்பட்டு, தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இவ்வழக்கில் இறந்தவர் சபுராபீவி 34 க.பெ.சதீஸ்குமார் என்பதும், இறந்தவரின் கணவர் சதீஸ்குமார் 38 த.பெ.செல்வம் என்பவர் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு, அடிக்கடி சண்டையிட்டு கொண்டு இருந்ததால், தனது அண்ணன் வீட்டில் இருந்தவரை, கணவர் சதீஸ்குமார் பேசி அவரை அழைத்துகொண்டு பொன்மலையில் இரயில்வேதுறைக்கு சொந்தமான தற்சமயம் யாரும் குடியில்லாத வீட்டின் சமையல் அறையில் வைத்து வயரால் கழுத்தை இறுக்கி, கல்லால் நெற்றி பொட்டில் தாக்கி கொலை செய்துவிட்டு, புடவையால் தூக்கு போட்டதுபோல் தொங்கவிட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளார் என விசாரணையில் தெரியவந்து, உடனடியாக எதிரி சதீஸ்குமார் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே எதிரி சதீஸ்குமார் என்பவரின் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு பொன்மலை காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்த திருச்சி மாநகர காவல் ஆணையர் N.காமினி, மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரி மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற கொலை குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களால் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.