எஸ். ஆர். எம். நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருங்களூர் ஊராட்சியில் உள்ள எஸ்.ஆர்.எம்.நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது.
எஸ். ஆர். எம் கல்வி குழும வளாகத்தில் எஸ்ஆர்எம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் சார்பில் முதுகலை மேலாண்மை, முதுகலை கணினி அறிவியல், செயல்முறை மருத்துவம், இயன் முறை மருத்துவம் சுகாதார அறிவியல் படிப்புகளுக்கான 2023- 24 ஆம் ஆண்டுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா திருச்சி மற்றும் ராமாபுரம் எஸ்ஆர்எம் கல்வி குழுமத்தின் தலைவர் டாக்டர் சிவகுமார் தலைமையில் நடைபெற்றது. திருச்சி எஸ்ஆர்எம் கல்வி நிறுவனத்தின் அறிவியல் மற்றும் மானுடவியல் பல முதன்மையர் முனைவர் வைத்தியநாதன் வரவேற்புரை வழங்கினார்்திருச்சி வளாக இயக்குனர் முனைவர் மால் முருகன் இயன்முறை மருத்துவ புல முதன்மையர் முனைவர் சுரேஷ், செயல்முறை மருத்துவ புல முதன்மையானர் முனைவர் மணிக்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.
இந்நிகழ்வில் பெண்கள் தொழில் முனைவோருக்கான நிறுவனர் மற்றும் தன்னம்பிக்கை பேச்சாளர் மகாலட்சுமி சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு சிறப்புரை வழங்கினார். அவர் மாணவர்களிடம் கூறியதாவது எஸ் ஆர் எம் பல்கலைக்கழகம் தனக்கு முதல் சிறந்த அடித்தளமாக அமைந்தது என்றும், மாணவர்கள் தொழில் முனைவோர் ஆவது எண்ணத்தில் இருந்து தொடங்க வேண்டும் என்றும் வலையொலி போன்ற சமூக ஊட கங்களை தேவைக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் உற்சாகமாக மாணவர்களிடம் உரையாற்றினார்.
இவ்விழாவில் புலம முதன்மையர்கள் முதல்வர்கள், பேராசிரியர்கள்,முதலாத்மாண்டு மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். சுகாதார அறிவியல் துறை துணை முதல்வர் டாக்டர் சுந்தர்ராஜன் நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியை தமிழ் துறை உதவி பேராசிரியர் முனைவர் அனிதா, ஆங்கிலத் துறை உதவி பேராசிரியர் முனைவர் சண்முகப்பிரியா தொகுத்து வழங்கினார்.