28, 29ம் தேதிகளில் நடைபெற உள்ள வேலை நிறுத்த போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க முடிவு!
தமிழ்நாடு AITUC கட்டடத் தொழிலாளர் சங்கம் அல்லித்துறை கிளை பேரவை கூட்டம் மணிகண்டம் ஒன்றிய துணைச் செயலாளர் முத்துலெட்சுமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு மாநில குழு உறுப்பினர் முருகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பேரவையில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்று தலைவராக முத்துலெட்சுமி, செயலாளராக ரஷியாபேகம், பொருளாளராக பல்கீஸ்பானு,
துணைத் தலைவராக சரோஜா, துணைச் செயலாளராக விமலா ஆகியோர்களை ஏக மனதுடன் தேர்ந்தெடுக்கப்பட்டு புதிய நிர்வாகிகளை வாழ்த்தி மணிகண்டம் ஒன்றிய பொருளாளர் முத்தழகு உரையாற்றினார். கூட்டத்தில் தாயனூர் கொய்யாத்தோப்பு ஆகிய பகுதிகளிலிருந்து அல்லித்துறை வழியாக சத்திரம் பேருந்து நிலையம் மத்திய பேருந்து நிலையத்திற்கு பள்ளி நேரங்களில் காலை மாலை கூடுதல் பேருந்து இயக்க கோரியும் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து அல்லித்துறை சரவனாபுரம்

வரை தனி பேருந்து வசதி ஏற்படுத்த கோரியும், மார்ச் 28 29 ஆகிய தினங்களில் நடைபெறும் அகில இந்திய பொது வேலை நிறுத்த போராட்டத்தில் அனைவரும் பங்கேற்பது, தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் மற்றும் அனைத்து உடலுழைப்பு தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற பெண்களுக்கு 50 வயதிலும் ஆண்களுக்கு 55 வயதிலும் மாதம் மாதம் ரூபாய் 6 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். அனைத்து வாரிய உறுப்பினர்களின் குழந்தைகள் கல்விச் செலவு முழுவதையும் வாரியமே ஏற்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. முடிவில் புதிய கிளை பொருளாளர் பல்கீஸ்பானு நன்றி கூறினார்.