திருச்சி அரியமங்கலம் சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் வாடகைக்கு கடை எடுத்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக அரியமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பரணிதரன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர்.
அப்போது தாராநல்லூர் கிருஷ்ணாபுரம் ரோடு பகுதியை சேர்ந்த அல் அமீன்(35) என்பவர் தனது கடையில் ரேஷன் கடை அரிசியை வாங்கி வந்து அதை குருணையாக்கி திருச்சி மற்றும் வெளிமாநிலங்களுக்கு கோழி தீவனங்களாக அனுப்பி வந்தது தெரியவந்தது. இதை அடுத்து அங்கிருந்த 70 மூட்டை ரேஷன் அரிசியை குருணையாகவும், 10 மூட்டை அரைக்கப்படாமல் முழு அரிசியாகவும் இருந்தது. இதனை உடனடியாக அரியமங்கலம் போலீசார் பறிமுதல் செய்து அல்அமீனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.