தமிழகத்தில் ஆளுநர் எதிர்க்கட்சியை போல் செயல்பட்டு வருகிறார் : அமைச்சர் கே என்.நேரு பேச்சு

0 264
Stalin trichy visit

அதிமுக இரண்டாக பிரிந்துள்ள நிலையில் அவர்களை ஒன்று சேர விடாமல் பாஜக செயல்பட்டு வருகிறது – தமிழகத்தில் ஆளுநர் எதிர்க்கட்சியை போல் செயல்பட்டு வருகிறார் – திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் கே என்.நேரு பேச்சு

திருச்சி வடக்கு தெற்கு, மத்திய மாவட்ட தி.மு.க செயல் வீரர்கள் கூட்டத்தில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சரும், தி.மு.க முதன்மை செயலாளருமான கே.என்.நேரு பேச்சு:

ஆளுநர் எதிர்கட்சியை போல் செயல்படுகிறார்.

இந்த ஆட்சிக்கு அவப்பெயரை உண்டாக்கும் நோக்கத்தோடுபா.ஜ.க வினர்  செயல்படுகிறார்கள்.

அ.தி.மு.க இரண்டாக பிரிந்துள்ளது. அவர்கள் இடத்தை பிடித்து விட வேண்டும் என்கிற நோக்கத்தில் பா.ஜ.க வினர் அ.தி.மு.க வை ஒன்று சேர விடாமல் பார்த்து கொள்கிறார்கள்.

இன்று உள்ள அதிகாரிகள் மத்திய அரசுக்கு பயந்து கொண்டு இருக்கிறார்கள். வெக்கத்தை விட்டு சொல்லனும்னா நாம சொல்வதைக் அவர்கள் கேட்பதில்லை.

எனவே நாம் இப்பொழுது பலமாக  இருப்பதை போல் பலமாக இருந்து நாடாளுமன்ற தேர்தலில் பணியாற்றி 40 இடங்களிலும் வெற்றி பெற வேண்டும். திருச்சியில் வெற்றி பெற்றால் அது தமிழ்நாட்டின் அனைத்து இடங்களின் வெற்றியையும் தீர்மானிக்கும் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.