ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நீதிபோதனை வகுப்பு தொடக்க விழா
திருச்சி,ஜூலை 7 திருச்சி மாவட்டம், முத்தரசநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நீதிபோதனை வகுப்பு தொடக்கவிழா இன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியை சகாய சந்திரா வரவேற்புரையாற்றினார். அந்தநல்லூர் ஒன்றிய வட்டாரக் கல்வி அலுவலர் கா.மருதநாயகம் தலைமை வகித்தார். வட்டாரள வளமைய மேற்பார்வையாளர் (பொ) கு.மீனா வாழ்த்து வழங்கினார். திருப்பராய்த்துறை விவேகானந்தா தொடக்கப்பள்ளி ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் மா.ரெங்கசாமி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நீதிபோதனை வகுப்பு நடத்தினார். நிறைவாக ஆசிரியை மலர்விழியாள் நன்றி கூறினார்.