திருச்சி விமான நிலையத்தில் ரூ.29 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலிண்டோ ஏர்லைன்ஸ் விமானம் நேற்று வந்து சேர்ந்தது.
அதில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்த போது அதில் ஒரு ஆண் பயணி கொண்டு வந்த கைக்கடிகாரம் மற்றும் செல்போன்களுக்குள் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதை எடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து சோதனை இட்டபோது தகடு வடிவில் சுமார் 476 கிராம் எடையுள்ள தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு 29லட்சத்து 43ஆயிரத்து 584 ரூபாய் என அதிகாரிகளால் மதிப்பிடப்பட்டது.