வருமான வரி ஊழியர்கள் சம்மேளன பிரதிநிதிகள் மாநாடு

0 279
Stalin trichy visit

திருச்சி, ஜன.9 வருமான வரி ஊழியர்கள் சம்மேளன பிரதிநிதிகள் மாநாடு – எம்பிக்கள் திருச்சி சிவா, சச்சினானந்தம் பங்கேற்பு!

வருமான வரி ஊழியர் சம்மேளனம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வட்டத்தின் 15 வது பிரதிநிதிகள் மாநாடு திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை சென்னை முதன்மை தலைமை வருமான வரி ஆணையர் டாக்டர் சுதாகர் ராவ் துவக்கி வைத்தார். வரவேற்பு குழு தலைவர் சுரேஷ் வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து சம்மேளனத்தின் மாநில தலைவர் சியாம் நாத் தலைமை உரையாற்றினார். சம்மேளனத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் ரூபாக் சர்க்கார், தமிழகம் மற்றும் புதுச்சேரியின் வருமான வரி அதிகாரிகள் சங்க மாநில தலைவர் சாலமன், பொதுச் செயலாளர் கண்ணன், தமிழக வருமான வரி ஓய்வூதியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பெருமாள், மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் மாநில பொதுச் செயலாளர் சுரேஷ், இந்திய தொழிற்சங்க மைய மாநில செயலாளர் கோபி குமார், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் பாஸ்கரன் ஆகியோர் மாநாட்டிற்கு வாழ்த்துரை வழங்கினர்.

மேலும் இம்மாநாட்டில் இன்றைய நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, திண்டுக்கல் எம்.பி.சச்சிதானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

மாநாட்டிற்கு முன்னதாக மத்திய அரசு ஊழியர்களின் பிரதான கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைக்கால நிவாரணம் 20% அடிப்படை ஊதியத்தை வழங்க வேண்டும், 50% பஞ்சபடியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும், மத்திய அரசு பணிகளுக்கு பிராந்திய அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து கலையரங்கம் திருமண மண்டபம் வரை பேரணி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சம்மேளன கொடி ஏற்றப்பட்டது.

நிகழ்வின் இறுதியாக அகில இந்திய தலைவரும் மாநில பொதுச் செயலாளர் எம் எஸ் வெங்கடேசன் நன்றி உரையாற்றினார். இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து வருமான வரி ஊழியர்கள், பிரதிநிதிகளாகவும் பார்வையாளர்களாகவும் பதவி உயர்வு பெற்ற அதிகாரிகள் மற்றும் ஓய்வூதியர்கள், விருந்தினர்கள் என சுமார் 800க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.