சூதாடிய 20 பேர் கைது : ரூ.1.20 லட்சம் ரொக்கம் பறிமுதல்

0 102
Stalin trichy visit

திருச்சி, ஜன.9  திருவெறும்பூர் அருகே உள்ள துவாக் குடி பகுதியில் பணம் வைத்து வெட்டு சீட்டாட்டத்தில் ஈடு பட்ட 20 பேரை துவாக்குடி போலீசார் கைது செய்ததோடு, அவர்களிடமிருந்து ரூ.1 லட் சத்து 20 ஆயிரம் ரொக்கம், 9 இருசக்கர வாகனம் மற்றும் 9 பண்டல் சீட்டு கட்டுகளை பறி முதல் செய்தனர்.

திருவெறும்பூர் அருகே உள்ள பொய்கைகுடி குளத்து கரை பகுதியில் வெட்டு சீட்டாட்டம் நடப்பதாக துவாக்குடி இன்ஸ் பெக்ட்டர் கமலஹாசனுக்கு தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் சக போலீசாருடன் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்று பார்த்த போது, 3 குழுக்களாக வெட்டு சீட்டாட்டத்தில் ஈடுபட்டவர் களை துவாக்குடி போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அப் போது, தலா 7 பேர் என 2 குழுக் களும், 6 பேர் என ஒரு குழுவாக அமர்ந்து வெட்டு சீட்டாட்டத் தில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் விசாரணை * செய்தபோது, மாத்தூரை சேர்ந்த கணபதி சுப்பிரமணியம் (36), மணி கண்டம் செங்குறிச்சியை சேர்ந்த – விஜயகுமார் (33), குளத்தூரை சேர்ந்த கவியரசன் (31), திருவளர்ச் – சிபட்டி பால்ராஜன் (30), வீரம் பட்டி முத்துகிருஷ்ணன் (56), * புலியூர் சுரேஷ் (35), கண்ணாங்கு – டியை சேர்ந்த குமார் (43), அசூர் சதீஷ் (33), ராவுத்தாம்மேடு பிர – காஷ் (25), துவாக்குடி தங்கராஜ் (49), திருநெடுங்களம் சுப்பிரமணி (55), செம்பட்டை சேர்ந்த சதீஷ்கு 7 மார் (35), கீழையூர் சிங்காரவேலு (47), கீழ வயலூர் பிரவீன் குமார் – (33), வரகனேரி சீனிவாசன் (47 – ), திருநெடுங்களம் ராம்குமார் (35), திருச்சி இபி ரோடு சண் முகம் (48), திருச்சி கல்யாண 5 சுந்தரபுரம் வினோத்குமார் (36), குளத்தூர் சந்திராசு, சுப்பிரம க ணியபுரம் சிவகுருநாதன் (40) 5 ஆகிய 20 பேரை கைது செய்த 5 தோடு, அவர்களிடமிருந்து ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் ரொக்கம் – 52 சீட்டுகள் கொண்ட 9 சீட்டு – பண்டல்கள் 9 இருசக்கர வாக னங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் 20 பேரையும் காவல் நிலையம் 5 அழைத்துச் சென்று வழக்கு பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.