ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு
திருச்சி, ஜூன் 15 திருச்சி மாவட்டம், அந்த நல்லூர் ஒன்றியம் கம்பரசம்பேட்டை காலனி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி 27.10.1963ல் தொடங்கப்பட்டது – கடந்த அறுபது ஆண்டுகளில் 40 மாணவர்கள் எண்ணிக்கையை தாண்டாத இப்பள்ளி இந்தாண்டு 11 புதிய மாணவர்கள் சேர்க்கையுடன் 44 மானவர்கள் எண்ணிக்கையை தொட்டு உள்ளது ஒரு சரித்திர சாதனையாகும் ‘பள்ளியின் நற்பெயரை உயர்த்தி மாணவர்களை பள்ளியை நோக்கி வரச் செய்த தலைமை ஆசிரியர், உதவி ஆசிரியர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள்பெற்றோர்கள் பொதுமக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.இன்று புதிதாய் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு மலர் மாலை, கிரீடம் அணிவித்து மலர் தூவி பல பரிசுகள் இனிப்புகள் வழங்கி வரவேற்றனர்.திருச்சி நகரத்திற்கு மிக அருகில் உள்ள பள்ளி அனைத்து தடைகளையும் உடைத்து இப்பகுதியின் அனைத்து பள்ளி வயதுக் குழந்தைகளையும் பள்ளியில் சேர்த்து சாதனை புரிந்துள்ளது பாராட்டிற்குரியது.