கார்மல்ஸ் குழுமப் பள்ளிகளில் சுதந்திர தின விழா

0 313
Stalin trichy visit

கார்மல்ஸ் குழுமப் பள்ளிகளில் 75 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு கார்மல்ஸ் குழுமப் பள்ளிகளின் தலைவர் திரு.தேவதாஸ் சாமுவேல், தாளாளர்  பாக்கிய ஜோதி தேவதாஸ், முதல்வர் திரு. மனோவா பிரேம் குமார் மற்றும் கல்வி ஒருங்கிணைப்பாளர் ஜோஸ்ஃபின் பெர்ஸி வெஸ்லி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில் தலைவர் திரு.தேவதாஸ் சாமுவேல் அவர்கள் மூவர்ண கொடியை ஏற்றி மாணவ மாணவியரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றார். முன்னதாக அவரது சிறப்புரையில், சுதந்திர தினத்தின் மேன்மை குறித்தும், நாம் சுதந்திர காற்றை சுவாசிக்க தன்னலம் பாராமல் இன்னுயிர் நீத்த சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகம் குறித்தும், மாணவ மாணவிகள் அவர்களின் தியாகம், துணிவு நாட்டுப்பற்று ஆகியவற்றை உணர்ந்து நாட்டின் சிறந்த குடிமக்களாக வீரு நடை போட வேண்டும் என்றும் கூறினார்.

மாணவ மாணவிகள், எண் 75 வடிவில் அமர்ந்து 75வது சுதந்திர தினத்தை சிறப்பு செய்தனர். பள்ளியின் நான்கு அணிகளான Daffodils, Tulip, Blue Bells, Zinnia ஆகியவற்றின் அணிவகுப்பு அக்குழு மாணவர்களால் நிகழ்த்தப்பட்டது. தேச பக்தி பாடல், நடனம், பேச்சு போட்டி ஆகியவற்றில் மாணவர்கள் கலந்துகொண்டு தங்கள் தேசபக்தியை வெளிப்படுத்தினர். இவ்விழாவிற்கு பெற்றோர்கள் வருகை தந்து சிறப்பித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.