வசந்தநகர், வ.உ.சி. நகர், காவேரி நகர், ஜே.பி. நகர், ஜே.ஆர்.எஸ். நகர் குடியிருப்போர் நலசங்கம் சார்பாக சுதந்திர தினவிழா

0 361
Stalin trichy visit

இன்று 15.08.2022 இந்திய திருநாட்டின் 76ஆவது சுதந்திர தினவிழா கொடி எங்களது வசந்தநகர், வ.உ.சி. நகர், காவேரி நகர், ஜே.பி. நகர், ஜே.ஆர்.எஸ். நகர் குடியிருப்போர் நலசங்கம் சார்பாக சங்கதலைவர் முனைவர். கு.ராசரத்தினம்,  தலைமையில், 55ஆவது மாமன்ற உறுப்பினர் திரு.வெ.ராமதாஸ், அவர்கள் முன்னிலையில், சங்க பொருளாளர் பி.சிவசாமிவரவேற்பு நல்கிட, சங்கத்தின் செயலாளர் திபி.அந்தோணிசாமி, அவர்கள் கொடி ஏற்றி சிறப்புரை ஆற்றினார். 55ஆவது மாமன்ற உறுப்பினர் அவர்களும் சிறப்புரையாற்றினார். சங்க துணை செயலாளர்கள் அ.தட்சணாமூர்த்தி மற்றும் திரு.ஜான் பிரகாஷ் எபினேசன் அவர்களும் சங்கத்தின் சாதனைகளை விளக்கி பேசினார்கள். மாமன்ற உறுப்பினர் அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அவர் பேசுகையில் சங்க கோரிக்கைகள் விரைந்து நிறைவேற்றுவேன் என உறுதி கூறினார். சங்கம் சார்பாக பகுதி வாழ் மூத்த குடிமகன் & மூத்த குடிமகள், பிற மாநிலத்தை சார்ந்த மூத்த குடிமகன், மற்றும் கண்டோன்மென்ட் லயன்ஸ் தலைவி அவர்களுக்கும் சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இவ்விழாவில் சங்க நிர்வாகிகளும், ஏராளமான ஆண்களும், பெண்களும், சிறார்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி மற்றும் சமத்துவ காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.
இவ்விழா சிறப்பாக நடைபெற்றது. சங்கத்தின் துணை தலைவர் வருகை தந்த அனைவருக்கும் நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.