செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் சுதந்திர தின விழா
திருச்சி, ஆக.15 இந்திய திருநாட்டின் 79 ஆவது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் சுதந்திர தின விழா தலைமை ஆசிரியர் க.எழிலரசு தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ் ஆசிரியர் இமார்கிரேட் விக்டோரியா வரவேற்புரையாற்றினார். தேசிய கொடியை 35வது வார்டு மாமன்ற உறுப்பினர் சி.சுரேஷ் ஏற்றி, சிறப்புரையாற்றினார்.
விழாவில் மக்கள் சக்தி இயக்க சார்பில் 2024-2025ம் ஆண்டு பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் மூன்று மாணவர்களுக்கு 5000, 3000, 2000 ரூபாய், மக்கள் சக்தி இயக்க பாராட்டு சான்றிதழ், திருக்குறள் புத்தகம் மற்றும் பயனடைகள் வழங்கியதுடன், தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் அதிக மார்க் எடுத்த மாணவ, மாணவிகளுக்கும் 500 ரூபாய், மக்கள் சக்தி இயக்க பாராட்டு சான்றிதழ், திருக்குறள் புத்தகம் மற்றும் பயனடைகள் வழங்கினார்கள்.
மேலும் மக்கள் சக்தி இயக்க சார்பில் ஆசிரியர்களுக்கு “பிளாஸ்டிக்கை தவிர்ப்போம், துணிப்பையை எடுப்போம்” என்ற விழிப்புணர்வு நிகழ்வு நடந்தது.
விழாவில் தொடக்கப்பள்ளியில் தமிழில் பெயர் வைக்க ஊக்கப்படுத்தும் விதமாக 1ம் வகுப்பில் தமிழ் பெயர் வைத்த முகிலன்,கவின்,ஆகிய 2 மாணவருக்குகளுக்கு பணத்துடன், சான்றிதழ் மற்றும் பயன் ஆடைகள் வழங்கி வாழ்த்தினார்கள்.
விழாவிற்கு மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொருளாளர் கே.சி.நீலமேகம்,
துணை பொதுச் செயலாளர் வே.ரா.சந்திரசேகர், திருச்சி மாவட்ட செயலாளர் ஆர்.இளங்கோ, வாசுதேவன், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள். நிகழ்ச்சியை தமிழ் ஆசிரியர் க.அருணா தொகுத்து வழங்கினார். நிறைவாக அறிவியல் ஆசிரியர் ம.கெளரி நன்றி கூறினார்.