கோவில் திருவிழாவில் தகராறில் அரிவாள் வெட்டு : 3 பேர் கைது

0 249
Stalin trichy visit

திருச்சி ஆக 15 திருச்சி திருவானைக்கோவில் கணேசபுரம் தோப்பைச் சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 26) இவர் கடந்த 13ஆம் தேதி திருவானைக்கோவில் நெல்சன் சாலை அருகே நடந்த ஊர் திருவிழாவில் கலந்து கொண்டார். அப்போது இவரது நண்பனான தினேஷ்குமார் என்பவரை திருவரங்கம் புது காலனியைச் சேர்ந்த பூபதி ராஜா (வயது 19) பாரதி (வயது 20) சோனி பார்த்தா மற்றும் சிவக்குமார் ஆகிய நான்கு பேர் சேர்ந்து தாக்கியுள்ளனர் . இதுகுறித்து பிரபாகரன் கேட்ட போது இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அந்த நான்கு பேரும் பிரபாகரனை அந்த கோவில் திருவிழாவில் வைத்து கத்தியால் வெட்டி உள்ளனர் காயமடைந்த பிரபாகரன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இதுகுறித்து திருவரங்கம் போலீசார் வழக்குப்பதிந்து பூபதி, ராஜா மற்றும் பாரதியை கைது செய்து சிறையில் அடைத்தனர். சிவகுமார் மற்றும் சோனி பார்த்தா  ஆகியோரை  தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.