திருச்சி என்.ஐ.டி. நிகழ்ச்சியில் ஏபிவிபி- தேசிய ஒழுங்கமைப்பு செயலாளர் பங்கேற்பதைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

0 198
Stalin trichy visit

திருச்சி, பிப். 28  திருச்சி என்.ஐ.டி. நிகழ்ச்சியில் ஏபிவிபி- தேசிய ஒழுங்கமைப்பு செயலாளர் பங்கேற்பதைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருச்சி என் ஐடி கல்லூரியில் என் ஐ டி கல்லூரி மற்றும் மாணவர்களின் வளர்ச்சிகான அறகட்டளை இணைந்து நடத்தும் 2026 ஆம் ஆண்டு ஆராய்ச்சி துறை மாணவர்கள் தங்களது படைப்புகளை வெளி கொண்டு வரும் தேர்வு விகாஸ் பாரத் 2047 வளர்ந்து வரும் பலத்துறைகள் பற்றிய நிகழ்ச்சியில் ஏபிவிபி தேசிய ஒழுங்கு அமைப்பு செயலாளர் கலந்து கொள்வதை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றவர்களை துவாக்குடி போலீசார் கைது செய்தனர்

திருச்சி என் ஐ டி கல்லூரியில்தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்கள் மற்றும் அண்டை நாடுகளை சேர்ந்த மாணவர்கள் தொழில் கல்வி மற்றும் ஆராய்சி கல்வியை பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி என் ஐ டி கல்லூரி வளாகத்தில் திருச்சி என் ஐ டி மற்றும் மாணவர்களின் வளர்ச்சிகான அறகட்டளை இணைந்து நடத்தும் 2026 ஆம் ஆண்டு ஆராய்ச்சி துறை மாணவர்கள் தங்களது படைப்புகளை வெளி கொண்டு வரும் தேர்வும் விகாஸ் பாரத் 2047 வளர்ந்து வரும் பலத்துறைகள் பற்றிய நிகழ்ச்சியும் நடந்தது.

இந்த விழாவில் ஏபிவிபி தேசிய ஒழுங்கமைப்பு செயலாளர் கலந்து கொள்வதை கண்டித்து இந்திய மாணவர் சங்க திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் வைரவளவன் தலைமையில் என்ஐடி கல்லூரி நுழைவாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர் அதனை போலீசார் தடுத்து அவர்களை கைது செய்தனர் அப்பொழுது மாணவர்கள் என்ஐடி கேட்டில் ஏரியும் சாலையில் உருண்டு பிரண்டும் தங்களது எதிர்ப்பை காட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.