திருச்சிக்கு வந்த இண்டிகோ விமானம் மீண்டும் சென்னை செல்ல தடை
திருச்சியிலிருந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் உள்நாட்டு விமான சேவைகளில் சென்னை, பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை சென்னையிலிருந்து திருச்சிக்கு வந்த இண்டிகோ விமானம் மீண்டும் சென்னை செல்வதற்கு தயாரானது.
இந்த நிலையில் சென்னையில் மோசமான வானிலை காரணமாக அந்த விமான சேவை ரத்து செய்யப்படுவதாக இண்டிகோ நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகள் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் சென்று அங்கிருந்து மாற்று வழியில் சென்னைக்கு அனுப்பி வைப்பதாகவும் மீதமுள்ள பயன்கள் இரவு நேர சேவையில் அனுப்பி வைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் சென்னையிலிருந்து திருச்சிக்கு வந்த விமானம் காலியாக கொச்சி நோக்கி மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் பெரும் அவதியை சந்திக்கும் நிலை ஏற்பட்டது.