காட்டூர், கைலாஷ்நகர், வின்நகர், கணேஷ்நகர் பகுதிகளில் மேயர் அன்பழகன் ஆய்வு
மேயர் மு. அன்பழகன் அவர்கள் காட்டூர் பகுதி கைலாஷ் நகர், வின் நகர்,
கணேஷ் நகர் ஆகிய பகுதிகள் நேரில் ஆய்வு
திருச்சி மாநகராட்சி மாண்புமிகு மேயர் மு. அன்பழகன் அவர்களிடம் காட்டூர் பகுதி கைலாஷ் நகர், வின் நகர், கணேஷ் நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த குடியிருப்பு நால சங்கத்தினர் தாங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை மாநகராட்சி மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் 11.07.2022 அன்று மேயர் அவர்களிடம் மனுக்களை வழங்கினார்கள்.
அதனை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேயர் அவர்கள் இன்று12.07.2022 அப்பகுதிக்கு சென்று நலச் சங்க உறுப்பினர்களை சந்தித்து குறைகளை கேட்டு அறிந்தார். குடியிருப்பு நால சங்கத்தினர் வைத்த கோரிக்கைகளை ஏற்று புதைவடிகள் மற்றும் குடிநீர் இணைப்பு குழாய் பதிக்கும் பணி முடிவுற்ற சாலைகளை உடனடியாக பணிகள் தொடங்கி விரைந்து முடிக்க மாநகராட்சி பொறியாளர்கள் உத்தரவிட்டார்கள். மேலும் புதைவடிகள் அமைக்கும் பணி முடிவுற்ற சாலைகளை செப்பனிடவும் பணிகள் முடிந்த சாலைகளை தார் சாலை அமைக்கவும் தெரிவித்தார்.
பின்னர் 40வது வார்டு பிரகாஷ் நகர் கார்மல் கார்டன் ஆகிய பகுதிகளை ஆய்வு செய்தார் புதைவடிகாள் பதிக்கும் பணிகள் முடிக்கப்பட்டதை மேயர் அவர்கள் ஆய்வு செய்து இந்த சாலையை 32.60 இலட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கப்படும் என குடியிருப்பு நால சங்கத்தினர்களுக்கு தெரிவித்தார்கள். பின்னர் வார்டு எண்.39 பாலாஜி நகர் பகுதியில் புதைவடிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்தக்காரர்களுக்கு உத்தரவிட்டார்கள்