அரசு மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா : எம்.எல்.ஏ, சௌந்தரபாண்டியன் பங்கேற்பு
புள்ளம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு விழாவில் லால்குடி எம்எல்ஏ சௌந்தரபாண்டியன் பங்கேற்பு.
திருச்சி, ஜன.5 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு விழாவில் லால்குடி எம்எல்ஏ சௌந்தரபாண்டியன் பங்கேற்றார்.
புள்ளம்பாடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட லால்குடி எம்எல்ஏ சௌந்தர பாண்டியன் மாணவ மாணவிகளிடையே சிறைப்புறையாற்றி போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி மேன்மேலும் வெற்றி பெற தனது வாழ்த்துக்களை தெரிவித்து பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் , ஒன்றிய குழு தலைவர் , துணை தலைவர்கள் , கல்வியாளர்கள் , பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் , அரசு அலுவலர்கள் , உள்ளாட்சி பிரதிநிதிகள் , ஆசிரிய பெருமக்கள் , மாணவ மாணவியர்கள் ,பொது மக்கள் கலந்து கொண்டனர்.