மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
திருச்சி, ஆக.2 – மக்களவையில், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, நாடு முழுவதும் ஜாதி வாரிய கணக்கெடுப்பு நடத்த வேண்டும், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கண்டிப்பாக நடத்தப்படும் என தெரிவித்தார். இதற்கு பதில் அளித்து பேசிய மத்திய அமைச்சர் அனுராதா தாகூர், ராகுல் காந்தியை விமர்சித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டுள்ளனர். திருச்சியில் மரக்கடை பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, காங்கிரஸ் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் எல். ரெக்ஸ் தலைமை வகித்தார். இதில் மத்திய அரசையும் அமைச்சர்களையும் கண்டித்து முழக்கம் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தேசிய செயலாளர் கிறிஸ்டோபர் திலக், தமிழ்நாடு மாநில செய்தி தொடர்பாளர் வேலுச்சாமி, தேசிய ஒருங்கிணைப்பாளர் அப்துல் ரஹீம், மாவட்ட பொருளாளர் முரளி, அபுதாகிர், சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் மன்சூர் அலி,ஓபிசி பிரிவு மாநிலச் செயலாளர் பூக்கடை பன்னீர்செல்வம், கோட்டத் தலைவர்கள் ராஜாடேனியல் ராய், அழகர், பிரியங்கா பட்டேல்,வெங்கடேஷ் காந்தி,கனகராஜ், ஜெயம் கோபி, மலர் வெங்கடேஷ், தர்மேஷ், எட்வின் ராஜ், மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி சீலா செலஸ், மனித உரிமை பிரிவு மாவட்டத் தலைவர் எஸ்.ஆர்.ஆறுமுகம், தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர்கள் அரிசி கடை டேவிட், விஜய் பட்டேல், ஊடகப்பிரிவு தலைவர் செந்தில்குமார், எம்.ஷேக் தாவூத், அமைப்புசாரா சம்பத், ஜி. கிருஷ்ணா, தர்கா பஷீர், முகமது ரஃபி, எம்.ராமன், ஜாகிர் உசேன், தேவதாஸ், சையத் இப்ராகிம், அன்பு ஆறுமுகம், கே மூர்த்தி, அன்பு ரோஸ், பெல்ட் சரவணன், பன்னீர்செல்வம், மாசிலாமணி, காட்டூர் கருப்பையா, செபஸ்டியன், ஆனந்த பத்மநாபன், சத்தியநாதன், நசீர், கருப்பையா, முகமது ஆரிப், வாசுதேவன், ரோசலின் மேரி, மணி, குணசேகரன், கோகிலா, சத்தியசீலா, சி. ராஜா, ஹிரா, தேவதாஸ், கண்ணன், பன்னீர்செல்வம், பாபுபாய், ஜாபர், ஜங்ஷன் ரமேஷ், பாலமுருகன், ஜி.மாரி ரமேஷ் குமார், எழிலரசன், வீரமணி, விமல் ராஜ், கண்ணன், ஏர்போர்ட் ரீகன், பூபதி, பாதயாத்திரை நடராஜன், அருள் ஜோன்ஸ், தியாகராஜன் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பிரதமர் மோடியின் கொடும்பாவியை எரிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.