முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் முதிர்வு தொகையை பெற அழைப்பு
திருச்சி மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் சேமிப்பு பத்திரம் பெற்று 18 வயது நிறைவடைந்தவர்கள் இத்திட்டத்தின் கீழ் முதிர்வுத் தொகை பெறுவதற்கு மாவட்ட சமூக நல அலுவலகம் மூலம் விண்ணப்பங்கள் பெற்று தமிழ்நாடு மின்விசை மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவே பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் சேமிப்பு பத்திரம் பெற்ற 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வங்கி புத்தகத்தின் நகல் மாற்றுச் சான்றிதழ் ஆதார் அட்டை குடும்ப அட்டை இரண்டு புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களுடன் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள சமூக நல விரிவாக்க அலுவலர்கள் மற்றும் மகளிர் ஊர் நல அலுவலர்களை தொடர்பு கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது