தமிழர்களின் உரிமைகளையும், தமிழின் மாண்பையும் பின்னுக்கு தள்ளுவதுதான் உங்களின் மாற்றமா சி.எம்.சார்? : முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கேள்வி?
திருச்சி, மே 22 முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இணையதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தமிழர்களின் உரிமைகளையும் தமிழின் மாண்பையும் பின்தள்ளுவதுதான் உங்களின் மாற்றமா CM Sir? இதற்கு என்ன மாதிரியான உருட்டுப் பொய்களையும், கேள்வி கேட்பவர்களை நோக்கித் தீய வார்த்தைகளையும் அவிழ்த்துவிடப் போகிறீர்கள்?
அமைச்சரவை விரிவாக்க நிகழ்விலும் வந்தே மாதரத்திற்கு முன்னுரிமைத் தரப்பட்டு, தமிழ்த்தாய் வாழ்த்திற்கு மூன்றாம் இடம் ஒதுக்கப்பட்டதைக் கண்டித்து, முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பதிவிட்டுள்ளார்.
முன்னதாக கடந்த 10 ஆம் தேதி சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலமைச்சர் ஜோசப் விஜய் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. அதேபோல் நேற்று மற்றும் இன்று நடைபெற்ற அமைச்சரவை விரிக்கத்திலும், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.