காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு நாள் அனுசரிப்பு
திருச்சி, மே 22 முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு நாளை (மே21) காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கடந்த 1991 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட 35-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மத்திய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள கர்மவீரர் காமராஜர் சிலையில் இருந்து அமரர் ராஜீவ் காந்தி அவர்களின் திருவுருவ படம் தாங்கிய கைப்பதாகைகள் மற்றும் கொடிகளை ஏந்தி அமைதி ஊர்வலமாக அமரர் ராஜீவ் காந்தி சிலை வரை சென்று அவரது திருவுருவ சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர், மாமன்ற உறுப்பினர் எல். ரெக்ஸ் அவர்களின் தலைமையில் மாவட்ட பொருளாளர் முரளி , ஜங்ஷன் பிரியங்கா பட்டேல் முன்னிலையில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநிலங்களவை உறுப்பினர் மாண்புமிகு. கிறிஸ்டோபர் திலக், மாநில செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி ஆகியோர் கலந்துகொண்டு அமரர் ராஜீவ் காந்தி அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
நிகழ்வில் அமைப்பு சாரா பிரிவு மாநில தலைவர் மகேந்திரன், முன்னாள் ராணுவ பிரிவு ராஜசேகரன், மாவட்ட நிர்வாகிகள் புல்லட் ராஜா, பட்டேல், கோட்டத் தலைவர்கள் ஸ்ரீரங்கம் ஜெயம் கோபி, மார்க்கெட் பகதூர்ஷா, காட்டூர் ராஜா டேனியல் ராய், அரியமங்கலம் அழகர், பொன்மலை பாலு, சுப்ரமணியப்புறம் எட்வின், வரகனேரி இஸ்மாயில், அணி தலைவர்கள் மகிளா காங்கிரஸ் அஞ்சு, ஷீலாசெளஸ், இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுசெயலாளர் விஜய் பட்டேல், கலைப் பிரிவு அருள், சுப்புராஜ், எஸ்சி பிரிவு மாநில செயலாளர் சோபியா, அமைப்புசாரா பிரிவு மகேந்திரன், தகவல் அறியும் உரிமை சட்டம் பிரபாகரன், மாணவர் காங்கிரஸ் நரேன், சிறும்பான்மை பிரிவு பஜார் மொய்தின், இலக்கிய பிரிவு பத்பநாபன், இந்திரா தோழி மாரீஸ்வரி, ஜூலியா, என்ஜிஓ பிரிவு கண்ணன் வார்டு நிர்வாகிகள் நிர்வாகிகள் பாண்டியன், சரவணன், அஞ்சலிதேவி, மூர்த்தி, நித்தியானந்தம், சம்பத், சையத், தியாகி ராஜா, விஜி, கண்ணன், சரவணன், ரவி சுந்தரம், மார்ட்டின், பத்மா, விமல், ரபிக், விமல், மாரியம்மாள், மகேஷ், மற்றும் பல நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.