முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து இடிமுரசு இஸ்மாயில் கடிதம்!

0 284
Stalin trichy visit

நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளில் முஸ்லீம்களுக்கு உரிய அங்கீகாரம் அளித்த முதலமைச்சருக்கு முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழக மாநில பொதுச்செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த நகராட்சி மாநகராட்சி பேரூராட்சி தேர்தலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 8 மாத கால நாடு போற்றும் நல்லாட்சி புகழ் மிக்க பொற்கால ஆட்சிக்கு ஆதரவாக தமிழக மக்கள் மகத்தான வெற்றியை தேடித் தந்தார்கள். அப்படி வெற்றிபெற்றவர்களில் 138 நகராட்சிகளில் இஸ்லாமிய சமுதாயத்திற்கு கீழ்கண்ட 13 நகராட்சி தலைவர்களையும், 24 பேரூராட்சி தலைவர்களையும் அறிவித்துள்ளதை முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பில் பராட்டுகிறேன்.

நகராட்சி தலைவர்களாக 1.மேலூர்-முஹம்மது யாசீன், 2.மேல்விஷாரம் – ST முஹம்மது அமீன், 3.இராமேஷ்வரம் -நாசர்கான், 4.ஆம்பூர்-ஏஜியாஸ்அஹமத், 5.வந்தவாசி-ஜலால், 6.அதிராம்பட்டிணம் தாஹிரா அம்மாள், 7.மதுக்கரை- நூர்ஜஹான், 8.கீழக்கரை -செஹானஸ்ஆபீதா, 9.கடையநல்லூர் – ஹபீப்ரஹ்மான், 10.தென்காசி -சாதீர், 11.காயல்ப்பட்டிணம்-முத்துமுஹம்மது, 12. பள்ளப்பட்டி முனைவர் ஜான், 13.மேட்டுப்பா ளையம்-மெஹரிபா ஆகியோரையும்,

பேரூராட்சி மன்ற தலைவர்களாக 1.ஆர்.எஸ். மங்களம் -மௌசூரியா பானு, 2 அபிராமம் – பாத்திமா கனி, 3.முதுகுளத்தூர்-ஷாஜகான், 4.புது வயல்-முஹம்மது மீரான், 5.இளையான்குடி செய்யதுஜமிமா, 6.ஏர்வாடி-தஸ்லிமா இப்ராஹிம், 7.வடகரை கீழ்படுகை-சேக்தாவுத், 8.வாசுதேவன் நல்லூர்-லைலாபானு, 9.ஆத்தூர்-கமாலுதீன், 10.உடன் குடி-ஹமைராபாத்திமா, 11.திருவிதாங்கோடு ஹாருண்ரஷித், 12. முத்துப்பேட்டைமும்தாஜ் பேகம், 13.லெப்பைகுடிகாடு ஹிர்உசேன், 14.அன்னவாசல் மதினா பேகம், 15.ஊத்தங்கரை -அமானுல்லா, 16.மதுக்கூர்-வகிதா பேகம், 17 கங்கை கொண்டான் பரிதா அப்பாள்,

18.செஞ்சி-முக்தியார் அலி மஸ்தான், 19.விக்கிரவாண்டி அப்துல் சலாம், 20.செங்கம் சாதிக் பாட்ஷா, 21.ஊத்துகோட்டை அப்துல் மஜித், 22.சித்தையன் கோட்டை-போதும்பொண்ணு, 23.நத்தம் சேக் சிக்கந்தர், 24. உத்தமபாளையம் அப்துல் முஹம்மது காசிம் உள்ளிட்டவர்களை அறிவித்து நகராட்சியில் சுமார் 10 சதவீதத்தையும், பேரூராட்சியில் 5 சதவீதத்தையும் வழங்கி இஸ்லாமிய சமுதாயத்திற்கு உரிய பிரதிநிதிதுவத்தை வழங்கிய சிறுபான்மை சமுதாய பாதுகாவலர் முதலமைச்சருக்கு நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.