தொழில்முனைவோராக உருவாக்கும் வகையில் பயிற்சி பெற்ற திருநங்கைகளுக்கு சான்றிதழ் வழங்கல்

0 268
Stalin trichy visit

 

திருச்சி, ஜூன் 28. திருச்சி நவலூர் குட்டப்பட்டு அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக்கல்லூரி வளாகத்தில் நபார்டு திட்டத்தின் கீழ் திருநங்கைகளை தொழில்முனைவோராக உருவாக்கும் வகையில் மதிப்பு கூட்டப்பட்ட உணவு தயாரித்தல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டு அவர்களுக்கு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் வழங்கி, திருநங்கைகள் உணவகம் தொடங்கி நடத்துவதற்கான ஏற்பாட்டினை செய்தார். இந்நிகழ்ச்சியில் நபார்டு மாவட்ட வளர்ச்சி மேலாளர் மோகன்கார்த்திக், அன்பில்தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரி முதல்வர் வன்னியராஜன், தோட்டக்கலைக்கல்லூரி முதல்வர் பரமகுரு,திட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், தலைமை செயல் அலுவலர் சந்தோஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.