திடக்கழிவு மேலாண்மை குறித்த திறன் மேம்பாட்டுப் பயிற்சி பட்டய சான்றிதழ் வழங்கல்

0 336
Stalin trichy visit

வையம்பட்டி சூர்யா நினைவு அறக்கட்டளை வளாகத்தில் திடக்கழிவு மேலாண்மை குறித்த திறன் மேம்பாட்டுப் பயிற்சி பட்டய சான்றிதழ் வழங்கினார்கள்.

இந்தியாவிலேயே முதன்முறையாக திடக்கழிவு மேலாண்மை குறித்த திறன் மேம்பாட்டுப் பயிற்சி வகுப்பு 50 நாட்கள் வையம்பட்டி சூர்யா நினைவு அறக்கட்டளை வளாகத்தில் 11.5.2022 அன்று நடைபெற்றது.

இப்பயிற்சியில் உயிரிமருத்துவக் கழிவு, நெகழிக் கழிவு, கட்டிடக் கழிவு மற்றும் மின்னனுக் கழிவு ஆகியவற்றை கையாளுவதற்கான நவீன தொழில்நுட்பங்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு.
மத்திய சூழலியல், வனங்கள் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகத்தின் கீழ் டெல்லியைச் சார்ந்த TERI நிறுவனத்தின் வல்லுனர்களை கொண்டு ஊரகப்பகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 30 நபர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.

மண்டேலா சொலூசன்ஸ் நிறுவனம், ஃபார்ம் இந்தியா நிறுவனம், சூர்யா நினைவு அறக்கட்டளை இணைந்து பயிற்சி பெற்றவர்களுக்கு வருவாய் வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்துள்ளது.

இதுபோன்ற பயிற்சி மற்றும் விழிப்புணர்வு செயல்பாடுகள் குப்பை மேடுகளை குபேர மேடுகளாக மாற்றிடும்.
சராசரியாக ஒரு நாளைக்கு 490 கிராம் குப்பையை உற்பத்தி செய்யும் இந்தியர்கள் நுகர்வு குறைப்பு, மறுசுழற்சி, மறுபயண்பாடு , ஆகியவற்றை அறிய வேண்டியது காலத்தின் கட்டாயத்தில் உள்ளோம்.

குப்பையில்லா உலகம் படைப்போம் ஒரே பூமி என்ற தலைப்பில் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்

இந்த நிகழ்ச்சி தொடங்கி பயிற்சி பெற்ற 30 மாணவியருக்கும் பட்டய சான்றிதழ் அவர்களின் வேலையை உறுதி செய்யும் ஆணை வழங்கப்பட்டது.

இந்த விழாவிற்கு வையம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவரும் சூரியா நினைவு அறக்கட்டளையின் தலைவருமான சூர்யா சுப்பிரமணியன் தலைமையில் TERI நிறுவனத்தின் Dr. பட்டாச்சாரியார் சிறப்பு விருந்தினராக திருமதி பல்லவி TERI கலந்து கொண்டனர் .
வையம்பட்டி ஒன்றிய தலைவர் குணசீலன் வையம்பட்டி பிடிஓ ரேவதி சந்தீப் மண்டல சொல்யூஷன் சிறப்புரை வழங்கினார்கள் இந்த விழாவில் பாம் இந்தியா நிறுவனர் தங்கபாண்டியன் வரவேற்புரையாற்றினார் இந்த நிகழ்ச்சியின் நிறைவாக சூரியா நினைவு அறக்கட்டளையின் பொருளாளர் நாகலட்சுமி நன்றி உரை கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.