அதிமுக உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கல்

0 247
Stalin trichy visit

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மணப்பாறை தொகுதி, மணப்பாறை ஒன்றியம் மற்றும் மணப்பாறை நகர கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நம் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் கே.வி. டி கலைச்செல்வன் அவர்களின் தலைமையிலும், மணப்பாறை ஒன்றிய செயலாளர் செங்குட்டுவன் மற்றும் மணப்பாறை நகர கழக செயலாளர் மதிவாணன் ஆகியோரது ஏற்பாட்டில் மிக சிறப்பாக நடைபெற்றது.

இதில் மேற்குறிப்பிட்ட கழக ரீதியான பகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் தவறாது கலந்து கொண்டு தங்களது உறுப்பினர் அடையாள அட்டையை பெற்றுக் கொண்டனர்.

மேலும் இந்நிகழ்வில் மாநில, மாவட்ட, சார்புஅணி, தலைமை கழக பேச்சாளர்கள், ஒன்றிய, நகர் மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள் என பலரும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.